எந்த காலத்திலும் சசிகலாவால் முதல்வராக முடியாது: முதல்வர் பன்னீர்செல்வம்

எந்த காலத்திலும் சசிகலாவால் முதல்வராக முடியாது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
எந்த காலத்திலும் சசிகலாவால் முதல்வராக முடியாது: முதல்வர் பன்னீர்செல்வம்

சென்னை: எந்த காலத்திலும் சசிகலாவால் முதல்வராக முடியாது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

எங்களிடம் உள்ள எம்எல்ஏக்கள் சுதந்திரமாக உள்ளனர். விடுதியில் உள்ள எம்எல்ஏக்களை அவர்களது சொந்த தொகுதிக்கு அனுப்பி வையுங்கள்.

சட்டப்பேரவை கூடும்போது நான் தான் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று குறிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அசாதாரணமான சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என்பாதால் தான் அமைதியாக உள்ளேன். எந்த காலத்திலும் சசிகலாவால் முதல்வராக முடியாது என்றார்.

மேலும், 75 நாட்களாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது செய்தியாளர்களை சந்த்தித்து சசிகலா ஏன் பேட்டி அளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

கூவத்தூருக்கு சசிகலா இரண்டு நாட்கள் செல்ல காரணம் என்ன. கூவத்தூரில் ஒவ்வொரு எம்எல்ஏக்களையும் 4 குண்டர்களை வைத்து பாதுகாத்து வருகிறார்கள்.

சசிகலாவை முதல்வராக்க அதிமுக எம்எல்ஏக்கள் விரும்பவில்லை. கூவத்தூரில் உள்ள எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என்னுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.

தொடர்ந்து பேசி வரும் பன்னீர்செல்வம், 15 ஆண்டுகளாக சசிகலாவிடம் சித்ரவதை அனுபவித்து வந்தேன். நான் வேண்டாம் என்று சொல்லியும் என்னை முதல் அமைச்சராக்கி அவமானப்படுத்தினார்கள்.

அதிமுக தொண்டர்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவின் ரத்த உறவான அண்ணன் மகள் தீபாவை ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போதும் பார்க்க விடவில்லை, இறந்தபோதும் அவரது சடலத்தை பார்க்கக்கூட விடாமல் தடுத்தவர் சசிகலா என்று கூறியவர் நாளை தலைமை செயலகம் செல்ல உள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில், தேனி மக்களவை உறுப்பினர் பார்த்தீபன் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இதையடுத்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளிக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com