காஞ்சிபுரத்தில் தர்பூசணி வரத்து அதிகரிப்பு

காஞ்சிபுரத்தில் கோடைக் காலத்துக்கு முன்பே தர்பூசணி சீசன் தொடங்கி உள்ளது. ஒரு பழம் ரூ. 75 முதல் 150 வரை விற்கப்படுவதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் தர்பூசணி வரத்து அதிகரிப்பு

காஞ்சிபுரத்தில் கோடைக் காலத்துக்கு முன்பே தர்பூசணி சீசன் தொடங்கி உள்ளது. ஒரு பழம் ரூ. 75 முதல் 150 வரை விற்கப்படுவதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோடைக் காலத்தில் மக்களுக்கு குளிர்ச்சி தரும் வகையில் தர்பூசணி விளங்குகிறது. சுவைக்காகவும், குளிர்ச்சிக்காகவும் அனைத்துத் தரப்பினரும் விரும்பி சாப்பிடும் பழமான தர்பூசணி மார்ச், ஏப்ரல் மாதங்களில்தான் விற்பனைக்கு வரும். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே தர்பூசணி பழம் விற்பனைக்கு வந்துள்ளது. மக்களும் தர்பூசணியை ஆர்வமாக வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தர்பூசணி வியாபாரி, விப்பேட்டைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் கூறியதாவது:
குளிர்காலம் இன்னும் முடிவடையவில்லை என்றாலும் பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்பம் மக்களை வாட்டத் தொடங்கி உள்ளது.
தர்பூசணி பழங்களை உத்தரமேரூர், செய்யூர் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஒரு டன் ரூ. 9,500-க்கு வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். இதில் லாரி வாடகை, கூலி ஆகியவை சேர்க்க வேண்டியுள்ளது.
ஒரு பழம் சுமார் 3 கிலோவில் இருந்து 6 கிலோ வரை உள்ளது. ஒரு கிலோ தர்பூசணி ரூ. 25 என்று விற்கிறோம். தர்பூசணி வரத்து அதிகரித்தால் கிலோ ரூ. 15 வரை குறைய வாய்ப்புள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com