கூவத்தூரில் செய்தியாளர்கள் சாலை மறியல்

அதிமுகவினர் அத்துமீறி நடந்துகொண்டதால் கூவத்தூரில் செய்தியாளர்கள் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர்.
கூவத்தூரில் செய்தியாளர்கள் சாலை மறியல்

சென்னை: அதிமுகவினர் அத்துமீறி நடந்துகொண்டதால் கூவத்தூரில் செய்தியாளர்கள் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர்.

கூவத்தூர் தனியார் நட்சத்திர விடுதியில் உள்ள அதிமுக எம்எல்ஏ-க்களுடன் இரண்டாவது நாளாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா ஆலோசனை நடத்தி வருகிறார். இதையடுத்து செய்தி சேகரிப்பதற்காக சென்ற செய்தியாளர்களை உள்ளே விடாமலும் செய்தி சேகரிக்க கூடாது என மிரட்டல் விடுத்தும் அவர்களிடம் உள்ள கேமராக்கள், செல்போன்களை பறித்துக்கொண்டு கொன்றுவிடுவோம் என்றெல்லாம் தகாத வார்த்தைகளால் அதிமுக அத்துமீறி மிரட்டி வருகின்றனர்.

அப்போது, அங்கு பாதுகாப்பிற்காக நிற்கும் போலீஸார் சம்பவத்தை வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றச்சாட்டும் செய்தியாளர்கள், இந்த விவகாரத்தில் உடனடியாக, டிஜிபி தலையிட்டு, செய்தியாளர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.  

சசிகலா ஆலோசனை நடத்திவரும் கூவத்தூர் விடுதியை சுற்றி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அதிமுகவினர் அத்துமீறி நடந்துகொண்டதால் கூவத்தூரில் செய்தியாளர்கள் சாலை மறியலில், செய்தியாளர்களுக்கு ஆதரவாக உள்ளூர் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com