அதிமுக உள்கட்சி விவகாரத்தில் திமுக தலையிடவில்லை: கனிமொழி

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் திமுக தலையிடவில்லை என, அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
அதிமுக உள்கட்சி விவகாரத்தில் திமுக தலையிடவில்லை: கனிமொழி

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் திமுக தலையிடவில்லை என, அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தற்போது தமிழகத்தில் குழப்பமான சூழலை அதிமுக உருவாக்கியுள்ளது. அவர்களின் உள்கட்சி விவகாரத்துக்கு திமுகவை குறை கூறுவது தவறு. அவர்கள் உள்கட்சி விவகாரத்தில் திமுக தலையிட வேண்டிய அவசியம் இல்லை.
தமிழகத்தில் அதிமுகவில் நாளுக்கு நாள் அணி மாறும் காட்சிகளும், ஆளுநரின் தாமதத்தினாலும் தமிழகத்தில் ஒரு குழப்பான சூழல் உருவாகியுள்ளது. மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாக அதிமுக உள்ளது. மக்களுக்காக பாடுபடும் ஒரே கட்சியாக திமுக உள்ளது. மக்களை நேரடியாகச் சந்திக்கும் தலைவராக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com