அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு: இளைஞர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றுள்ள சூழலில், தமிழக இளைஞர்களுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: அரசியல் சாயமில்லாத தமிழர்களின் விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அலங்காநல்லூரில் சிறப்பாக நடைபெற்றன.
கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஆட்ட நாயகன் பட்டம் வழங்கி பரிசளிக்கப்படுகிறது.
அதுபோல, ஏறுதழுவதல் போட்டியில் பங்கேற்கும் வீரமிக்க இளைஞர்களுக்கும் காளைகளை வளர்ப்போருக்கும் அனைவரும் கவனிக்கும்படியான பெருமைமிக்க பட்டங்களும் பரிசுகளும் வருங்காலத்தில் தரப்பட வேண்டும்.
ஜல்லிக்கட்டு நடைபெற காரணமாக இருந்த இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்துகள் என்று கூறியுள்ளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com