ஆளுநர் அழைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது: தங்கதமிழ்ச்செல்வன்

அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யா சாகர் ராவ் அழைப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
ஆளுநர் அழைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது: தங்கதமிழ்ச்செல்வன்

அதிமுக பொதுச் செயலர் வி.கே.சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யா சாகர் ராவ் அழைப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் தங்கியுள்ள அவர் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:-
இப்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, ஆட்சி அமைப்பதற்கு, வேண்டுமென்றே தாமதம் உருவாக்கப்படுகிறது. இது குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்படுகிறது. போதுமான உறுப்பினர்கள் இருக்கும்பட்சத்தில், சசிகலாவை முதல்வராக அறிவித்தோம். ஆனால் தாமதம் செய்வது, உள்நோக்கத்துடனான செயலாகக் கருதுகிறோம்.
128 எம்எல்ஏக்கள் ஆணித்தரமாக இருக்கிறோம். எங்கு வேண்டுமானாலும் வரத் தயார். குடியரசுத் தலைவர், ஆளுநரைச் சந்திக்கத் தயார். எங்கு கூப்பிட்டாலும் சென்று பலத்தை சென்று நிரூபிக்கத் தயார்.
இருப்பினும், ஆளுநர் அழைக்கவில்லை. ஜனநாயக முறைப்படி சசிகலா ஆளுநரிடம் மனு செய்துள்ளார்.
அதை ஆராய்ந்து திங்கள்கிழமை நிச்சயம் அழைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுக ஆட்சி தொடரும் என்றார்.

"அன்றும், இன்றும் எதிராகவே ஓ.பி.எஸ்.'

பேட்டியின்போது, தங்கதமிழ்ச்செல்வன் கூறியதாவது:- சொந்தக் காரணங்களுக்காக பதவி விலகுகிறேன் என்ற தீர்மானத்தை பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். வரவேற்றோம்.
இரண்டு நாள்கள் கழித்து முடிவை பரிசீலிக்கிறேன் என்றார். அவரின் பின்னணியில் பாஜக, திமுக ஆகிய கட்சிகள் உள்ளன. 1989-இல் அதிமுக பிளவுபட்ட நேரத்தில், ஜெயலலிதாவுக்கு எதிராக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட ஜானகி அணியில் இருந்த நடிகை நிர்மலாவுக்கு முகவராக இருந்தார். அப்போது ஜெயலலிதா தோற்றிருந்தால் அதிமுக எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்திருக்கும். அப்போதே கட்சிக்கு துரோகத்தைச் செய்தவர்தான் ஓ.பி.எஸ். மூன்று முறை முதல்வராக்கியதற்கு, அதிமுகவை உடைக்க முற்படுகிறார்.
இதனை கோடிக்கணக்கான தொண்டர்கள் ஒன்று திரண்டு எதிர்ப்போம். நாடகமாடுவதை எந்தத் தொண்டனும் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றார் தங்கதமிழ்ச் செல்வன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com