தீர்ப்பு வரும்வரை ஆளுநர் காத்திருப்பதில் தவறில்லை: ராமதாஸ்

ஆளுநர் காத்திருப்பதில் தவறில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
தீர்ப்பு வரும்வரை ஆளுநர் காத்திருப்பதில் தவறில்லை: ராமதாஸ்

ஆளுநர் காத்திருப்பதில் தவறில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
காஞ்சிபுரம் மேற்கு, தெற்கு மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டம் காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது:-
அதிமுகவில் தற்போது அதிகாரப் போட்டி நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக மக்களின் அடிப்படைத் தேவைகளை கவனிப்பார் யாருமில்லை. இவர்களைத் தட்டிக் கேட்கும் சக்தியாக இளைஞர்கள் உருவாக வேண்டும்.
காஞ்சிபுரம் அண்ணா பிறந்த மண். அண்ணாவின் ஆட்சிக்காலம் சிறப்பாக இருந்தது. இப்போது நிலைமை மாறிவிட்டது.
தமிழகத்துக்கு ஒரு நல்ல மருத்துவர் தேவைப்படுகிறார். அவர் அன்புமணியாக மட்டுமே இருக்க முடியும்.
தமிழகத்தில் தற்போதுள்ள சூழலில், சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை ஆளுநர் காத்திருப்பதில் தவறில்லை என்றார் ராமதாஸ்.
கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் மகேஷ்குமார் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச்செயலர்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், பொன். கங்காதரன், முன்னாள் எம்எல்ஏ
சக்தி கமலம்மாள், நகரச் செயலர்கள் உமாபதி, செல்வராஜ், ஆ.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com