தீவிரமடைகிறது தமிழக அரசியல் களம்: நேரடியான தாக்குதல் ஆரம்பம்

இந்த சிங்கம் எந்த வலைக்கும் சிக்காது, எத்தனை வலை போட்டாலும் இந்த சிங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது என்று அதிமுக பொதுச் செயலர் சசிகலா பேசினார்.
தீவிரமடைகிறது தமிழக அரசியல் களம்: நேரடியான தாக்குதல் ஆரம்பம்


சென்னை: இந்த சிங்கம் எந்த வலைக்கும் சிக்காது, எத்தனை வலை போட்டாலும் இந்த சிங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது என்று அதிமுக பொதுச் செயலர் சசிகலா பேசினார்.

போயஸ் தோட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் பேசிய வி.கே. சசிகலா, எம்ஜிஆர் மறைந்த போது ஒரு பெண் எப்படி அரசியலுக்கு வரலாம்என்று ஜெயலலிதாவை தடுக்க முற்பட்டனர். இப்போதும் அதே தோரணையுடன் செயல்படுகின்றனர்.

அதிமுக மிரட்டல், உருட்டல்கள் பெரிதல்ல. எதிர் நீச்சல் போட்டே இந்தக் கட்சியை வளர்த்து வந்துள்ளோம்.

அடிமட்டத் தொண்டர்களின் ஆதரவு கட்சிக்கு உள்ளது. அவர்கள்தான் இந்த இயக்கத்தின் சொந்தக்காரர்கள். எல்லை மீறிப்போனால் கட்சித் தொண்டர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

கட்சியைப் பிளக்க வலை போட்டுப் பார்க்கிறார்கள். ஆனால், இந்த வலைக்கு எல்லாம் சிங்கம் சிக்காது. எத்தனை வலை போட்டாலும் சிங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது. என்னுடன் இருப்பவர்கள் அனைவருமே சிங்கங்கள்தான் என்று கூறினார்.

இந்த பேச்சினைத் தொடர்ந்து, தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், இங்கிருக்கும் யாராவது தங்களைத் தாங்களே சிங்கம் என்று சொல்லிக் கொள்வார்களா? என்று தனது பேச்சின் போது கேள்வி எழுப்பினார்.

இதன் மூலம், தமிழக அரசியல் களம் மேலும் தீவிரமடைந்துள்ளது என்றே கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com