அதிமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு இல்லை

அதிமுகவை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
அதிமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு இல்லை

அதிமுகவை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி:-
தற்போதைய சூழலில் சசிகலாவுக்கோ, ஓ.பன்னீர்செல்வத்துக்கோ காங்கிரஸின் ஆதரவு இல்லை. பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் காங்கிரஸின் ஆதரவை அவர்கள் கேட்டால், காங்கிரஸ் மேலிடத்திடமும், எம்எல்ஏக்களிடமும் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும்.
இருவருமே சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று கூறி வருகின்றனர். ஆளுநர் காலம்தாழ்த்தாமல் விரைந்து சட்டப்படி செயல்பட வேண்டும்.
பேரவையில் பெரும்பான்மையை நீரூபிக்குமாறு கூறும்போது, எம்எல்ஏக்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்களா அல்லது சொந்த விருப்பத்தின் பேரில் இருந்தார்களா என்பதும் தெரிந்துவிடும். காவல் துறையை அனுப்பி எம்எல்ஏக்களை அழைத்து வர முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுக்கலாம். அசாதாரண சூழல் ஏற்படும் என்பதால்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறும் கருத்தை அப்படியே ஏற்க முடியுமா எனத் தெரியவில்லை.
பாஜக முயற்சி: அதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைப் பயன்படுத்தி தமிழகத்தில் பாஜக வளர முயற்சிக்கிறது. ஆளுநரின் காலதாமத நடவடிக்கையை பாஜக தலைவர்கள் வரவேற்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தமிழக அரசின் நடவடிக்கையிலும், அதிமுகவின் உள் விவகாரத்திலும் பாஜகவின் தலையீடு இருப்பதாகத் திட்டவட்டமாக குற்றஞ்சாட்டுகிறேன்.
பாஜகவில் கருத்து வேறுபாடு: ஆளுநர் காலம் தாழ்த்தினால் வழக்கு போடப் போவதாக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கூறுகிறார். அந்தக் கருத்து பாஜகவின் கருத்தே இல்லை என்று தமிழிசை, எச்.ராஜா ஆகியோர் கூறுகின்றனர். பாஜகவினருக்குள்ளேயே கருத்து வேறுபாடு இருக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com