உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை ஆளுநர் காத்திருக்கலாம்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை தமிழக ஆளுநர் காத்திருக்க வேண்டும் என்று மத்திய முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை ஆளுநர் காத்திருக்கலாம்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை தமிழக ஆளுநர் காத்திருக்க வேண்டும் என்று மத்திய முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் வறட்சியால் இதுவரை 126 விவசாயிகள் இறந்துள்ளனர். பருவமழை பொய்த்துவிட்டதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. இதுபோன்ற முக்கிய பிரச்னைகளில் தமிழக ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் யாரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பது தொடர்பாக ஆளுநர் காலம் தாழ்த்துவது நியாயமாகத்தான் தோன்றுகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை ஆளுநர் காத்திருப்பதில் தவறில்லை.
காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை சசிகலா, பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு இல்லை. கூட்டணிக் கட்சியான திமுக எடுக்கும் முடிவுக்கு ஆதரவாக இருப்போம். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்து வருவது அவரது சொந்தக் கருத்து.
கொல்லைப்புறமாக முயற்சி செய்தாலும் பாஜக ஒருபோதும் தமிழகத்தில் காலூன்ற முடியாது. ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் நிறைவேற்றியது, ஆந்திர அரசுடன் பேசி காவிரி நீர் பெற்றுத் தந்தது, எளிதில் யாரையும் அணுகும் முறை என கடந்த 2 மாதங்களாக முதல்வர் பன்னீர்செல்வம் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com