சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கக் கூடாது

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை கைவிடவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை கைவிடவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
சேலம் உருக்காலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து, 2007-08-ஆம் ஆண்டு அதற்கான பணிகள் தொடங்கின. இவற்றில் இரு உற்பத்திப் பிரிவுகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வெற்றிகரமாக நிறுவப்பட்டு, முழு உற்பத்திக்காக தயார் நிலையில் உள்ளன.
மூன்றாவது உற்பத்திப் பிரிவுக்கான இயந்திரங்களை ஆலைக்கு கொண்டுவரும் வழியில் ஏற்பட்ட போக்குவரத்து விபத்து, அதனால் உருவானச் சட்டச் சிக்கல் ஆகியவற்றால்
2010-ஆம் ஆண்டு நிறுவப்பட்டு உற்பத்தியைத் தொடங்கவேண்டிய யூனிட் 2016-ஆம் ஆண்டுதான் நிறுவப்பட்டது. கடந்த சில மாதங்களாக அதன் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில், நட்டத்தில் இயங்குவதாக காரணம் காட்டி தனியாருக்குத் தாரைவார்க்கத் தயாராகி, அதற்கான பணிகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. சாத்தியக்கூறு அறிக்கையானது, விரிவாக்கப்பணி முழுமை பெற்று 5 ஆண்டுகளுக்குப் பிறகே சேலம் உருக்காலை படிப்படியாக லாபம் ஈட்டும்.
மேற்கூறிய அறிக்கையின் வரையறைகளைப் புறந்தள்ளிவிட்டு "செயில்', மத்திய அரசு எடுத்துள்ள இந்த தனியார்மயப்படுத்தும் முடிவானது தமிழக நலன்களைப் பாதிப்பதோடு, சேலம் உருக்காலையில் பணிபுரியக்கூடிய, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயலாக உள்ளது. எனவே, சேலம் உருக்காலையைத் தனியார்மயப்படுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com