எண்ணூர் துறைமுகத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் விரைவில் நோட்டீஸ்

கடலில் கச்சா எண்ணெய் கொட்டிய விவகாரம் குறித்து சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்திடம் விளக்கம் கேட்டு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் விரைவில் நோட்டீஸ் அனுப்பும் என்று

கடலில் கச்சா எண்ணெய் கொட்டிய விவகாரம் குறித்து சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்திடம் விளக்கம் கேட்டு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் விரைவில் நோட்டீஸ் அனுப்பும் என்று தெரிகிறது.
கடந்த மாதம் எண்ணூர் துறைமுகம் அருகே இரு கப்பல்கள் மோதிக் கொண்டன. அப்போது ஒரு கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் எண்ணெய் படலமாக மாறியது. கடல் பகுதி முழுவதும் கருமை நிறமாக மாறியது. இதனால், ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன. பெரும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. பல நாள் போராட்டத்துக்குப் பிறகு கடல் மேல் படர்ந்திருந்த எண்ணெய்ப் படலம் 90 சதவீதம் வரை அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கடலில் கலந்த எண்ணெயில், 65 டன் அளவுக்கு இதுவரை அகற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கடலுக்கு அடியில் மணலுடன் சேர்ந்து படிந்துள்ள எண்ணெயை அகற்றும் பணி இப்போதுதான் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழுவினர் ஏற்கெனவே எண்ணூர் துறைமுகப் பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விளக்கமளிக்குமாறு எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் விரைவில் நோட்டீஸ் அனுப்பும் என்று
அத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com