இன்று மாலை பதவியேற்பு: அதிமுகவினர் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்!

தமிழக முதல்வராக பதவியேற்க அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதிகாரப்பூர்வமாக இன்று அழைப்பு விடுத்தார்.
ஆளுநர் வித்யாசாகர் ராவை அவரது மாளிகையில் புதன்கிழமை இரவு சந்தித்த அதிமுக சட்டப்பேரவை குழு தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர்.
ஆளுநர் வித்யாசாகர் ராவை அவரது மாளிகையில் புதன்கிழமை இரவு சந்தித்த அதிமுக சட்டப்பேரவை குழு தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர்.


சென்னை : தமிழக முதல்வராக பதவியேற்க அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதிகாரப்பூர்வமாக இன்று அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். அடுத்த 15 நாட்களில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அறிவுறுத்தியிருப்பதாகவும் ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14ம் தேதி ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்த ஆதரவு கடிதத்தின் அடிப்படையில், தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிசாமியுடன் அதே அமைச்சரவை பதவியேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசியலில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com