லால்குடி அருகே ஜல்லிக்கட்டு: 181 காளைகள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே எம்.கண்ணனூர் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், 181 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 250- க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
லால்குடி அருகே எம். கண்ணனூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்து வந்த காளையை அடக்கும் இளைஞர்கள்.

கடந்த சில ஆண்டுகளாக, நீதிமன்ற தடையால் எம்.கண்ணனூரில் நடத்தப்படாமல் இருந்த ஜல்லிக்கட்டுப் போட்டி, நிகழாண்டில் மீண்டும் நடத்தப்பட்டது. இதில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 181 காளைகள் பங்கேற்றன.
இதில் பெரும்பான்மையான காளைகள், கரிச்சான் காளைகளாக (சிறிய காளை) இருந்தன. ஒரு சில காங்கேயம் காளைகளும், பெரிய காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகள் வாடிவாசலில் இருந்து வெளியே வந்து மாடுபடி வீரர்களை விரட்டியது. ஒரு சில காளைகள் மீண்டும், மீண்டும் விளையாட்டுத் திடலிலேயே சுற்றி வந்தது.
இதில், மேலரசூர் பகுதியினைச் சேர்ந்த பாண்டியன், பெரம்பலூர் மாவட்டம் ராசலாபுரம் பகுதியினைச் சேர்ந்த அய்யாக்கண்னு உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர்கள் சிகிச்சை அளித்தனர். ஒரு சிலர் மேல் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விழாவில், சிறப்பு பார்வையாளராக திருச்சி மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் தர்ப்பகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாதுகாப்புப் பணியில் 268 போலீஸார் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com