அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும்: பொன்னையன்

தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும்: பொன்னையன்

தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தித் தொடர்பாளருமான பொன்னையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையன் கூறியதாவது:

அதிமுக சட்டவிதிகளின்படி, பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதிமுகவில் தற்காலிக, இடைக்கால பொதுச்செயலாளர் பதவி இல்லை. அப்படியான பதவி சட்டவிதிகளுக்கு மாறானது. அந்த பதவி செல்லாது. சசிகலா சட்டவிரோத பதவியை வைத்துக்கொண்டு, பொருளாளர் பதவியில் இருந்து பன்னீர்செல்வத்தையும், அவைத்தலைவர் பதவியில் இருந்து மதுசூதனனையும் மற்றும் எங்களையும் நீக்கியது செல்லாது. நாங்கள் அந்த பதவியிலேயே தொடர்ந்து நீடிக்கிறோம்.

10 ஆண்டுகளாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்த டாக்டர் வெங்கடேஷ், டி.டி.வி.தினகரன் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டும் டி.டி.வி.தினகரனுக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்குவதற்கு சசிகலாவுக்கு எந்த அதிகாரம் இல்லை. எனவே, டி.டி.வி. தினகரன் துணை பொதுச்செயலாளர் பணியை மேற்கொள்ள முடியாது.

மேலும், அதிமுக. அடிமட்ட உறுப்பினர்கள் மூலம், பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில், பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும்.

ஓ.பன்னீர்செல்வம் எளிமையானவர், அமைதியானவர், ஜெயலலிதாவின் இதயத்தில் குடியிருப்பவர், எம்.ஜி.ஆர். வழியில் நடப்பவர், அவருக்கு பொதுச்செயலாளர் பதவி ஏற்க தகுதி இருக்கிறது. மக்களும், தொண்டர்களும் அவரைத்தான் ஏற்றுக்கொண்டு உள்ளனர்.

பேரவை கூடும்போது உண்மைநிலை தெரியவரும். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எங்கள் பின்னால் வருவார்கள். ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக ஏற்றுக்கொள்வார்கள். ஜெயலலிதாவின் வழியில் நல்லாட்சி தொடரும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com