ஒசூரில் மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: மின் ஊழியர் கைது

மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஒசூர் மின் வாரிய அலுவலரை, லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஒசூர் மின் வாரிய அலுவலரை, லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே உள்ள பேகேப்பள்ளியைச் சேர்ந்தவர் லோகேஷ் (30). இவர் தனது நிலத்தில் ரோஜா தோட்டம் அமைப்பதற்காக ஒசூர் முதல் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள மின் வாரிய அலுவலகத்தில் வணிக ரீதியான மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தார்.
மின் இணைப்பு கொடுக்க வேண்டுமெனில், ரூ.1 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என அந்த அலுவலகத்தில் மின் வாரிய வணிகப் பிரிவு ஆய்வாளராகப் பணியாற்றிய சரவணன் (39) கேட்டாராம். இதனைத் தொடர்ந்து, லோகேஷ் இரண்டு தவணையாக ரூ.1 லட்சம் லஞ்சமாக வழங்கியுள்ளார். லஞ்சம் பெற்ற பிறகும், மின் இணைப்பு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தாராம். இதனைத் தொடர்ந்து, லோகேஷ் மின் இணைப்பு கொடுக்குமாறு சரவணனிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும், ரூ.10 ஆயிரம் வழங்கினால் மின் இணைப்பு வழங்கப்படும் என்று சரவணன் கூறினார். லோகேஷ் மேலும் பணம் கொடுக்க விரும்பாததால் அவர் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்குப் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் அறிவுரைப்படி, ரசாயனப் பொடி தடவப்பட்ட ரூ.10 ஆயிரத்தை வியாழக்கிழமை லோகேஷ் சரவணனிடம் கொடுத்தார்.
அப்போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ஞானசேகரன், ஆய்வாளர்கள் முருகன், காவலர்கள் பஞ்சாட்சரம், முருகன், விஜயகுமார், முத்துராகவன், பிரபாகர் ஆகியோர் கொண்ட குழுவினர் சரவணனை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com