செங்கோட்டை-புனலூர் அகலப் பாதையில் சோதனை ஓட்டம்

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை- புனலூர் அகலப் பாதையில் வியாழக்கிழமை சிறப்பு ஆய்வு ரயில் மூலம் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை- புனலூர் அகலப் பாதையில் வியாழக்கிழமை சிறப்பு ஆய்வு ரயில் மூலம் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
தமிழக எல்லையான செங்கோட்டையிலிருந்து கேரள மாநிலம், புனலூர் வரையிலான மீட்டர்கேஜ் பாதையை அகலப் பாதையாக மாற்றும் பணி, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.
தற்போது பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில், செங்கோட்டையிலிருந்து, கேரள மாநிலம், நியூ ஆரியங்காவு வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது. செங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அதைத் தொடர்ந்து சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
செங்கோட்டையிலிருந்து நியூ ஆரியங்காவு பகுதி வரை உள்ள 20.5 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு குகை மட்டுமே அமைந்துள்ளது. இக்குகையானது தமிழக எல்லைப் பகுதியான கோட்டைவாசல் பகுதியில் தொடங்கி சுமார் 850 மீட்டர் வரை சென்று கேரள மாநில எல்லையில் முடிவடைகிறது.
இந்த 20.5 கி.மீ. தொலைவை 30 நிமிடங்களில் சிறப்பு ரயில் கடந்தது. செங்கோட்டையிலிருந்து பகவதிபுரம் வரை 60 கிலோ மீட்டர் வேகத்திலும், அதைத் தொடர்ந்து, நியூ ஆரியங்காவு பகுதி வரை 30 கிலோ மீட்டர் வேகத்திலும் இயக்கப்பட்டது. பகவதிபுரம் பகுதியை அடுத்து தொடர் வளைவுகள் மற்றும் குகைப் பகுதி அமைந்துள்ளதால் அப்பகுதியில் ரயில் மெதுவாகவே இயக்கப்படுவது வழக்கம்.
இந்த மார்க்கத்தில் கேரள மாநிலம், புனலூரிலிருந்து எடமண் பகுதி வரையிலும் கடந்த 14ஆம் தேதி சிறப்பு ஆய்வு வண்டி இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தற்போது செங்கோட்டையிலிருந்து நியூ ஆரியங்காவு வரை ரயில் இயக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் சுனில் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
"இந்த ஆய்வுகுறித்து தெற்கு ரயில்வேயிடம் அறிக்கையை சமர்ப்பிக்கப்படும். பின்னர், அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வர்' என பாதுகாப்பு ஆணையர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com