ரயில் சிறைபிடித்து வைக்கப்பட்ட காந்தி மைதானம் முன்புள்ள ரயில் தண்டவாளத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்த ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன்.
ரயில் சிறைபிடித்து வைக்கப்பட்ட காந்தி மைதானம் முன்புள்ள ரயில் தண்டவாளத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்த ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன்.

ஜல்லிக்கட்டுப் போராட்ட இடங்களில் ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணை

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது, சேலத்தில் ரயில் சிறை பிடிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட இடத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டார்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது, சேலத்தில் ரயில் சிறை பிடிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட இடத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டார்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி, சென்னை மெரீனா கடற்கரை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில், சேலம் முள்ளுவாடி கேட் அருகே உள்ள தண்டவாளத்தில் ரயில் சிறைபிடிக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது ரயில் பெட்டி, என்ஜின் ஆகியவை சேதப்படுத்தப்பட்டன. இதன் சேத மதிப்பு சுமார் ரூ.60 லட்சத்துக்கு மேல் இருக்கும் என ரயில்வே துறையினர் அறிவித்தனர்.
இதனிடையே, ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடர்பாக நடைபெற்ற வன்முறை, போலீஸ் தடியடி குறித்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் வியாழக்கிழமை சேலம் வந்தார். அவர் ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்த ஆட்சியர் அலுவலகம் முன்புறம், ரயில் சிறைபிடிக்கப்பட்ட காந்தி மைதானம் அருகே உள்ள ரயில் தண்டவாளப் பகுதிகளில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
பின்னர் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டங்கள் நடைபெற்ற இடங்களை ஆய்வு செய்து வருகிறேன். அதன் அடிப்படையில், கோவையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெற்ற இடங்களான மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புறம் மற்றும் காந்தி விளையாட்டு மைதானம் அருகில் உள்ள ரயில்வே பாதை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பின்பு, விசாரணை ஆணையத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் விசாரணை நடைபெறும் குறிப்பிட்ட நாளை பொதுமக்கள் அறியும் வகையில் பத்திரிகை செய்தி வெளியிட்டு, அதன் பின்பு அந்த தேதியில் சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெற்ற இடங்களில் விசாரணை மேற்கொள்ளப்படும்.
அவ்வாறு விசாரணை மேற்கொள்ளும்போது பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கைகள் இருப்பின், நேரில் விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கலாம் என்றார்.
ஆய்வின்போது ஆட்சியர் வா.சம்பத், மாநகரக் காவல் துறை ஆணையாளர் சஞ்சய்குமார், துணை ஆணையர்கள் ஜோர்ஜி ஜார்ஜ், ஆர்.ராமகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர் பால்பிரின்ஸிலி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தமிழ்ராஜன், மாவட்ட மேலாளர் (பொது) சக்திவேல், வட்டாட்சியர் லெனின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com