தஞ்சை, அரவக்குறிச்சியில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: வரும் 20-ல் தொடக்கம்

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் பிப்ரவரி 20-இல் தொடங்கி, மார்ச் 6 வரை நடக்கின்றன.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் பிப்ரவரி 20-இல் தொடங்கி, மார்ச் 6 வரை நடக்கின்றன.
2016-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது, இரு தொகுதிகளில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு 4 மாதங்களுக்குப் பிறகு நடத்தப்பட்டதால், இதனால், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை இரு தொகுதிகளில் மட்டும் நடத்த இயலவில்லை.
இருப்பினும், 232 தொகுதிகளுக்கு வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், இரு தொகுதிகளில் வரும் 20-ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகள் தொடங்கும். வாக்காளர்கள் தங்களது பெயர்களைச் சேர்க்கவும், நீக்கவும், திருத்தவும் மார்ச் 6-ஆம் தேதி வரை மனுக்களை அளிக்கலாம். மேலும், கிராம சபை, உள்ளாட்சி மன்றம், குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டங்களிலும், வாக்காளர் பட்டியல் படித்துச் சரிபார்க்கும் பணிகள் 25-இல் மேற்கொள்ளப்படும்.
மனுக்கள் பெற வரும் 26-ஆம் தேதியும், மார்ச் 5-ஆம் தேதியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இரு தொகுதிகளிலும் இறுதி வாக்காளர் பட்டியல் மார்ச் 16- ஆம் தேதி வெளியிடப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com