கடனாநதி அணைப் பகுதியில் 70 நாள்களில் 4 சிறுத்தைகள் பிடிபட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம்

கடனாநதி அணைப் பகுதியில் உள்ள பெத்தான்பிள்ளைக் குடியிருப்பு கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட, 10 வயது பெண் சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
பெத்தான்பிள்ளைக் குடியிருப்பில் பிடிபட்ட 10 வயது பெண் சிறுத்தை.
பெத்தான்பிள்ளைக் குடியிருப்பில் பிடிபட்ட 10 வயது பெண் சிறுத்தை.

கடனாநதி அணைப் பகுதியில் உள்ள பெத்தான்பிள்ளைக் குடியிருப்பு கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட, 10 வயது பெண் சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. அப் பகுதியில், சுமார் 70 நாள்களில் 4 சிறுத்தைகள் கூண்டில் சிக்கியுள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள கடனாநதி அணை அடிவாரத்தில் அமைந்துள்ள விவசாய கிராமம், பெத்தான்பிள்ளைக் குடியிருப்பு. இக் கிராமம், களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக வனப் பகுதியின் கட்டுப்பாட்டில் உள்ள கடையம் வனச்சரகமான சிவசைலம் வனப் பகுதியின் அருகில் அமைந்துள்ளது. சுமார் 3 ஆண்டுகளாக, இப் பகுதியில் சிறுத்தைகள் நுழைந்து நூற்றுக்கும் மேல்பட்ட ஆடு, மாடு, நாய் போன்ற வளர்ப்பு விலங்குகளைப் பிடித்துச் சென்றுள்ளன. எனவே, வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தைகளைப் பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து, கடந்த டிசம்பர் 12, 25 மற்றும் ஜனவரி 30 ஆகிய நாள்களில் 3 சிறுத்தைகள் பிடிபட்டன. இந்நிலையில், மீண்டும் சிறுத்தைகள் கடந்த 9ஆம் தேதி ஊருக்குள் புகுந்த சிறுத்தை, ஒரு ஆட்டைத் தாக்கிக் கொன்றது.
இதனால், வனத்துறையினர் மீண்டும் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைத்தனர். இதில் (பிப்.16) வியாழக்கிழமை இரவு மீண்டும் ஊருக்குள் வந்த 10 வயது சிறுத்தை, வனத்துறையினர் வைத்தக் கூண்டில் சிக்கியது.
பிடிபட்ட சிறுத்தையை, முண்டன்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஜெயராஜ் உத்தரவின் பேரில் காரையாறு வனப் பகுதிக்குள்பட்ட கவுதலையாறு வனப் பகுதியில் கொண்டு
விட்டனர்.
டிசம்பர் 12ஆம் தேதியிலிருந்து சுமார் 70 நாள்களில் ஒரே பகுதியில் 4 சிறுத்தைகள் பிடிபட்டுள்ளதால், அப் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதுவரை பிடிபட்ட சிறுத்தைகளில் இதுதான் அதிக வயதுள்ள சிறுத்தை ஆகும். எனவே கடையம் வனச்சரகப் பகுதியில் இன்னும் சிறுத்தைகள் இருக்கலாம் என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சிறுத்தை, காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெத்தான்பிள்ளைக் குடியிருப்பு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com