சசிகலா, தினகரன் உள்பட 16 பேர் அதிமுகவிலிருந்து நீக்கம்

அதிமுகவில் இருந்து எடப்பாடி கே.பழனிசாமி, வி.கே.சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்பட 16 பேர் நீக்கப்படுவதாக இ.மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
சசிகலா, தினகரன் உள்பட 16 பேர் அதிமுகவிலிருந்து நீக்கம்

அதிமுகவில் இருந்து எடப்பாடி கே.பழனிசாமி, வி.கே.சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்பட 16 பேர் நீக்கப்படுவதாக இ.மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவில் இருந்து சிலர் பிரிந்து செயல்பட்டு, சட்டவிதிகளின்படி பொதுச்செயலராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இடம்பெற்றுள்ள அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
அதிமுக கொள்கைக்கு எதிரான செயல்பட்டு வரும் வி.கே.சசிகலா பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளதால் கட்சிக்கு அவப்பெயர்ஏற்பட்டுள்ளது.
மேலும், "கட்சியிலும், ஆட்சியிலும் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை, பொது வாழ்வில் பங்கு பெற வேண்டும் என்ற விருப்பமும் இல்லை' என்று ஜெயலலிதாவிடம் கொடுத்த உறுதியை மீறி செயல்பட்டுள்ளார். இதனால், அடிப்படை உறுப்பினர் பதவியில் சசிகலா நீக்கப்படுகிறார்.
மேலும், துரோகம் செய்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் கட்சியில் மீண்டும் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்ட அறிவிப்பும் ரத்தாகிறது.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மு.தம்பிதுரை, பி.தங்கமணி, தளவாய்சுந்தரம், பா.வளர்மதி, ஆர்.பி.உதயகுமார், நவநீதகிருஷ்ணன், சி.வி.சண்முகம், தாமரை ராஜேந்திரன், திண்டுக்கல் சி.சீனிவாசன், வி.பி.கலைராஜன், செல்லூர் கே.ராஜு, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட 16 பேருடன் கட்சியினர் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என மதுசூதனன் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com