நம்பிக்கை வாக்கெடுப்பு: பேரவைக்குள் நுழைய இன்று கடும் கட்டுப்பாடு

சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதை முன்னிட்டு, பேரவைக்குள் நுழைய கடும்

சென்னை: சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதை முன்னிட்டு, பேரவைக்குள் நுழைய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, இன்று பேரவையில், பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்; இதற்காக, நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று (பிப்.18)  காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது, நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் எடுக்கப்படும். வாக்கெடுப்பின் போது பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது என்பதால், தலைமைச்செயலகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பேரவையில் நுழைய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பேரவை அலுவலர்கள் மட்டுமே பேரவைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். அமைச்சர்களின் உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி, பொதுமக்கள் உள்ளிட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்துச்செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com