மதுரை தமிழ் இசை சங்க விழாவில் சுதா ரகுநாதனுக்கு விருது: பிப். 20-இல் வழங்கப்படுகிறது

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் செயல்படும் தமிழ் இசைச் சங்கத்தின் 42 ஆம் ஆண்டு தொடக்க விழா, வரும் 20ஆம் தேதி நடைபெறுகிறது.
மதுரை தமிழ் இசை சங்க விழாவில் சுதா ரகுநாதனுக்கு விருது: பிப். 20-இல் வழங்கப்படுகிறது

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் செயல்படும் தமிழ் இசைச் சங்கத்தின் 42 ஆம் ஆண்டு தொடக்க விழா, வரும் 20ஆம் தேதி நடைபெறுகிறது.
விழாவில், பத்ம பூஷண் சுதா ரகுநாதனுக்கு முத்தமிழ் பேரறிஞர் பட்டமும், பொற்கிழியும் வழங்கப்படுகிறது.
விழாவை, திங்கள்கிழமை (பிப்ரவரி 20) மாலை தேவகி முத்தையா தொடக்கி வைக்கிறார். விழாவுக்கு, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.திருமலை தலைமை வகிக்கிறார். இதில் இசைக் கலைஞரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான சுதா ரகுநாதனுக்கு முத்தமிழ் பேரறிஞர் பட்டமும், பொற்கிழியும் வழங்கப்படுகிறது. தமிழ் இசைச் சங்கத் தலைவர் ஏ.சி.முத்தையா வரவேற்று, விழா மலரின் முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார். தொடர்ந்து, சுதா ரகுநாதனின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 21) ஆல்.கல்பலதிகா ரவிசங்கர் குழுவினரின் இன்னிசையும், சேஷம்பட்டி சிவலிங்கம் குழுவினரின் நாதஸ்வரம் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. புதன்கிழமை (பிப்ரவரி 22) ராணி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக் கல்லூரி சார்பில் பரதக் கலையும், நாட்டுப்புறக் கலையும்- சங்கமம் நிகழ்ச்சியும், அன்று இரவு எழிச்சூர் அரவிந்தனின் அடக் கடவுளே நாடகமும் நடைபெறுகின்றன.
வியாழக்கிழமை (பிப்ரவரி 23) மாலை சுபஸ்ரீசசீதரனின் பரதநாட்டியமும், கவிஞர் அரு.நாகப்பன், சரஸ்வதி நாகப்பன் குழுவினரின் இன்னிசைப் பாட்டு மன்றமும் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 24) சைலஜா மகாதேவனின் மாணவ, மாணவியரின் ஸ்ரீபாலகிருஷ்ண லீலை நாட்டிய நாடகமும், வீரமணி ராஜூவின் இறை இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. சனிக்கிழமை (பிப்ரவரி 25) ஆவுடையார் கோவில் எச்.சுப்பிரமணியத்தின் கெத்துவாத்திய நிகழ்ச்சியும், கோவை அபியாசா அகாதெமியின் குன்றக்குடி குறவஞ்சி நாட்டிய நாடகமும் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 26) ராணி லேடி மெய்யம்மை ஆச்சி தமிழிசைக் கல்லூரி சார்பில் குரலிசை- கருவி இசை நிகழ்ச்சியும், கூத்தபிரான் நவ பாரத்தின் ஒரு ரோபோவின் டைரி நாடகமும் நடக்கின்றன.
திங்கள்கிழமை (பிப்ரவரி 27) அஞ்சனா ரமேஷின் பரத நாட்டியமும், புதுவை டாக்டர் வி.விநாயகம் குழுவினரின் நாதலய இசைச் சங்கமமும் நடைபெறுகின்றன. செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 28) ரெங்கநாயகி சச்சிதானந்தத்தின் இன்னிசையும், கோவை பத்துவின் அமரர் சாவியின் வாஷிங்டனில் திருமணம் நாடகமும் நடைபெறுகின்றன.
அதே போல், மார்ச் 1ஆம் தேதி தமிழிசை நிகழ்ச்சியும், விஜயலட்சுமி சுப்பிரமணியத்தின் இலக்கிய இசை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com