மெரினாவில் உண்ணாவிரதம் மேற்கொண்ட ஸ்டாலின் கைது!

சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் இன்று வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள்.
மெரினாவில் உண்ணாவிரதம் மேற்கொண்ட ஸ்டாலின் கைது!

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு போதிய பெரும்பான்மை பலம் இருந்ததால், அமைச்சரவை மீதான நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றது.

சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் இன்று வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டார்கள்.

தன்னுடைய சட்டை பொத்தான்கள் கிழிக்கப்பட்ட நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ஸ்டாலின். பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து ஆளுநர் மாளிகை நோக்கி புகார் கொடுக்க விரைந்தார்.  அங்கே அவருடன் துரைமுருகன் உள்ளிட்ட 8 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரைச் சந்தித்தனர்.

சந்திப்புக்கு பின்னர் நேராக மெரினா கடற்கரைக்கு வந்த ஸ்டாலின் அங்குள்ள காந்தி சிலை அருகே  'திடீர்' உண்ணாவிரதம் மேற்கொண்டார். திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில் மெரினாவில் உண்ணாவிரதம் மேற்கொண்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com