ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளியை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது: திருமாவளவன் வலியுறுத்தல்

சிறுமி ஹாசினியை பாலியல் வன்முறை செய்து, படுகொலை செய்த குற்றவாளியை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.
ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளியை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது: திருமாவளவன் வலியுறுத்தல்

சிறுமி ஹாசினியை பாலியல் வன்முறை செய்து, படுகொலை செய்த குற்றவாளியை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.
சிறுமிக்கு எதிராக நடைபெற்ற இந்தச் சம்பவத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின்போது திருமாவளவன் அளித்த பேட்டி:
தமிழகத்தில் தலித்துகளுக்கும், பெண்களுக்கும் எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் ஒரு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த ஆட்சி நிர்வாகத்தையே செயலிழக்க வைத்துள்ளது. காவல்துறை செயலிழந்து கிடக்கிறது. கொள்கை முடிவுகள் எடுக்க முடியாமல் நிர்வாகம் திணறுகிறது.
இப்படிப்பட்டச் சூழலில்தான் நந்தினி, ஹாசினி போன்றோர் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. பாதிக்கப்பட்ட ஹாசினி குடும்பத்துக்கு, ரூ. 3 லட்சம் நிதியுதவியை தமிழக அரசு வழங்கி இருக்கிறது. இது வேதனையாக இருக்கிறது. குறைந்தது ரூ. 50 லட்சமாவது வழங்க வேண்டும். மேலும், அந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதோடு, கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது.
அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விசாரணை முடித்து தண்டனை வழங்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com