கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணனுக்கு மிரட்டல்

செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல் துறையிடம் புகார் அளிப்பேன் என கோவை தெற்கு தொகுதி

கோவை: செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல் துறையிடம் புகார் அளிப்பேன் என கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் தெரிவித்துள்ளார்.

 தமிழக அரசியலில் நிலவி வந்த குழப்ப நிலை காரணமாக கோவை அதிமுக தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் சென்னையில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக தங்கி இருந்தார். இந்நிலையில் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்ததையடுத்து தமிழக சட்டப்பேரவையில் சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

 இதையொட்டி செல்லிடப்பேசியில் பரவிய செய்தியையொட்டி பொதுமக்கள் சிலர் தங்களது தொகுதி உறுப்பினரை தொடர்பு கொண்டு கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் தங்கியிருந்த தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ச்சுணனை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்பு மிரட்டல் விடுத்துள்ளார்.

 இது குறித்து கோவை திரும்பிய அம்மன் அர்ச்சுணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி தொடரும் வகையில் நாங்கள் செயல்பட்டோம். மக்கள் நலத் திட்டங்கள் மக்களுக்கே சென்றடையும் வகையிலும், அதிமுக ஆட்சி நிலைக்கவும் தொடர்ந்து பாடுபட்டோம்.

 இந்நிலையில், சென்னையில் தங்கியிருந்த என்னுடைய செல்லிடப்பேசிக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, என்னையும், எனது குடும்பத்தாரையும் அவதூறாக பேசினார். இதில் அரசியில் பின்னணி கொண்ட நபர் தான் என்னை மிரட்டும் நோக்கில் பேசியுள்ளார். மிரட்டல் விடுத்த நபர் குறித்து ஒரிரு தினங்களில் காவல் துறையிடம் புகார் அளிக்க உள்ளேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com