சம்பா சாகுபடியில் நஷ்டம்: விவசாயி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

சம்பா சாகுபடி செய்த விவசாயத்திற்கு தேவையான தண்ணரீன்றி பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த

கும்பகோணம்: சம்பா சாகுபடி செய்த விவசாயத்திற்கு தேவையான தண்ணரீன்றி பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த விவசாயி ஒருவர் கும்பகோணம் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

நாகை மாவட்டம் குத்தாலம் வட்டம், ஆலங்குடி பிரதான சாலையைச் சோந்தவா் கலியபெருமாள் மகன் கண்ணதாசன்(42) விவசாயி. இவருக்கு லோகநாயகி (32) என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனா்.

கண்ணதாசன் தனக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கா் நிலத்தில் சம்பா நடவு செய்திருந்தாராம். இதற்காக அவர் கடன் பெற்று சுமார் ரூ3 லட்சம் வரை செலவு செய்து நடவுப்பணிகளை செய்திருந்தார். ஆனால், பயிருக்கு போதுமான தண்ணீர் இல்லாமல் விளைச்சல் இல்லாமல் போனது, இதனால் செலவு செய்த பணத்தை விட குறைவாகவே கிடைக்கும் என்பதால், கண்ணதாசன் கடந்த ஒரு வாரமாக மன உளைச்சலில் இருந்து வந்தாராம்.

இந்நிலையில், நேற்று சனிக்கிழமை (பிப்.18) காலை 6 மணியளவில் கண்ணதாசன் அவரது மனைவியிடம் வயலுக்கு சென்று வருகிறேன் என கூறி சென்றவர் இரவு வரை வரவில்லை. கவலையடைந்த அவரது குடும்பத்தினர்கள் பல இடங்களுக்கு சென்று தேடி பார்த்தனர்.

இந்நிலையில், கும்பகோணம் ரயில்வே இருப்பு பாதை போலீஸாருக்கு, கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் பகுதி ரயில் தண்டவாளம் அருகில் ஒருவர் ரயில் அடிபட்ட நிலையில் இறந்து கிடக்கிறார் என்ற தகவல் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கிடைத்தது. போலீஸார் அங்கு சென்று பார்த்து விசாரித்த போது நாகை மாவட்டம் குத்தாலம் வட்டம், ஆலங்குடி பிரதான சாலையைச் சோ்ந்த கண்ணதாசன் என்பது தெரிய வந்தது.

பின்னா் அவரது உறவினா்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இது குறித்து கண்ணதாசனின் மனைவி லோகநாயகி கொடுத்த புகாரின் அடிப்படையில், ரயில்வே இருப்பு பாதை போலீஸார் கண்ணதாசனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் வழக்குப் பதிந்து எந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com