நீதிமன்றம் சென்றால் பேரவைத் தலைவரின் தீர்ப்பு ரத்து செய்யப்படும்: வி.பி.துரைசாமி

நீதிமன்றம் சென்றால் பேரவைத் தலைவரின் தீர்ப்பு ஒரு நிமிடத்தில் ரத்து செய்யப்படும் என சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவரும், திமுக துணைப் பொதுச் செயலருமான வி.பி.துரைசாமி தெரிவித்தார்.
நீதிமன்றம் சென்றால் பேரவைத் தலைவரின் தீர்ப்பு ரத்து செய்யப்படும்: வி.பி.துரைசாமி

நீதிமன்றம் சென்றால் பேரவைத் தலைவரின் தீர்ப்பு ஒரு நிமிடத்தில் ரத்து செய்யப்படும் என சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவரும், திமுக துணைப் பொதுச் செயலருமான வி.பி.துரைசாமி தெரிவித்தார்.
நாமக்கல்லில் அவர் சனிக்கிழமை அளித்த பேட்டி:
முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு உடனடியாக தீர்மானம் நிறைவேற்றப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்படுமானால் 6 மாதங்களுக்குப் பிறகுதான் மீண்டும் அந்தத் தீர்மானத்தை முன்மொழிய முடியும்.
இதனால் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் 2 முறை பேரவையை ஒத்திவைத்த பிறகு எதிர்க்கட்சி உறுப்பினர்களை முழுமையாக வெளியேற்றிவிட்டு, தீர்மானம் வெற்றிபெற்றதாக பேரவைத் தலைவர் தீர்ப்பளித்துள்ளார்.
பேரவைத் தலைவரின் தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகினால் ஒரு நிமிடத்தில் அந்தத் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு விடும். பேரவை விதிகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளாத பேரவைத் தலைவர் தனபால், திமுக மீது சாதி பாகுபாடு குற்றம்சாட்டி இருக்கிறார். திமுக துணைப் பொதுச் செயலராக நானும், ஏராளமான பொதுக்குழு உறுப்பினர்களும் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறோம்.
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 3 சத இட ஒதுக்கீடு காரணமாக இப்போது அருந்ததியர் சமுதாயத்தில் 400-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், ஏராளமான பொறியாளர்கள், துணை ஆட்சியர்கள் உள்ளனர். பேரவைத் தலைவர்தான் சாதி பாகுபாட்டை குறிப்பிட்டு பேரவையில் பேசியுள்ளார். இதுபோன்று பேசுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com