பேரவை உரிமை மீறல்: செம்மலை வலியுறுத்தல்

சட்டப் பேரவையில் உரிமை மீறல் பிரச்னையை அதிமுக எம்எல்ஏ செம்மலை கொண்டு வந்தார்.

சட்டப் பேரவையில் உரிமை மீறல் பிரச்னையை அதிமுக எம்எல்ஏ செம்மலை கொண்டு வந்தார்.
இதுதொடர்பாக பேசுவதற்கு அனுமதி கோரி, அவர் பேசியது: சுதந்திரமான எண்ணங்களை எம்எல்ஏக்கள் வெளிப்படுத்த பேரவைத் தலைவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கடந்த சில நாள்களாக தங்கியிருந்த இடத்தில் எனது (செம்மலை) உடைமைகள் இருக்கின்றன. எனக்கு அச்சுறுத்தல்களும், பயமுறுத்தல்களும் வந்து கொண்டிருக்கின்றன. தயவு செய்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக சட்டப் பேரவை உறுப்பினராக உள்ளேன். நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளேன். விதிகள் தெரியும். ஆனால், மக்களைச் சந்திக்கத் தடுக்கப்படுகிறோம். இது எந்த வகையில் நியாயம்?
எம்எல்ஏக்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறார்கள். தயவு செய்து கேவலப்படுத்த வேண்டாம் என்றார்.
இந்தப் பிரச்னை குறித்து தனது ஆய்வில் இருப்பதால் விவாதிக்க அனுமதியில்லை என பேரவைத் தலைவர் பி.தனபால் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com