22-இல் திமுக உண்ணாவிரதம்: மு.க.ஸ்டாலின்

திமுக சார்பில் பிப்ரவரி 22-இல் உண்ணாவிரதம் நடத்தப்படும் என திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
22-இல் திமுக உண்ணாவிரதம்: மு.க.ஸ்டாலின்

திமுக சார்பில் பிப்ரவரி 22-இல் உண்ணாவிரதம் நடத்தப்படும் என திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சட்டப் பேரவையில் அவை மரபுகளுக்கு மாறாகத் திட்டமிட்டு காவல் துறையினரால் திமுக எம்எல்ஏக்களை சனிக்கிழமை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். சட்ட விதிகளுக்குப் புறம்பாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியுள்ளனர். இதைக் கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில் பிப்ரவரி 22-இல் (புதன்கிழமை) காலை 9 முதல் மாலை 5 வரை உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறவுள்ளது என்றார்.
இதையடுத்து, அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்ததாவது:-
கேள்வி: பேரவைக் கூட்டத்துக்குப் பின்னர் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக, இரு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதே?
பதில்: வழக்குகளைச் சந்திக்க எந்த நேரத்திலும் தயாராகவே இருக்கிறோம். ஜனநாயகக் படுகொலையை மக்களுக்கு உணர்த்தும் வகையில் மிக விரைவில் திமுகவும் வழக்கு தொடரும்.
பேரவைத் தலைவரை திமுகவினர் தாக்கியதாக அதிமுகவினர் குற்றம்சாட்டுகிறார்களே?
திமுக எம்எல்ஏ ஒருவர் உடல் நலன் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கெல்லாம் விரைவில் முடிவு கட்ட மக்கள் தயாராக உள்ளனர்.
திமுக சார்பில் எங்கெல்லாம் போராட்டம் நடைபெறவுள்ளது?
திருச்சியில் நானும் (ஸ்டாலின்), காஞ்சிபுரத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகனும் பங்கேற்க இருக்கிறார்.
சட்டப் பேரவை விவகாரம் தொடர்பாக, ஆளுநரிடம் புகார் அளித்தீர்களா?
ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி என்.சிவா, ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் ஆதாரங்களுடன் புகார் கொடுத்துள்ளனர். தில்லிக்கு சென்று குடியரசு தலைவரையும் சந்தித்து முறையிட, நேரம் கேட்டு இருக்கிறோம் என்றார்.
கூட்டத்தில் எம்எல்ஏ ஐ.பெரியசாமி உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com