தமிழக அரசியல் குழப்பத்துக்கு மத்திய அரசே காரணம்

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பத்துக்கு மத்திய அரசே காரணம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் குற்றம்சாட்டினார்.
செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை  பேட்டியளிக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன்.
செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளிக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன்.

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பத்துக்கு மத்திய அரசே காரணம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் குற்றம்சாட்டினார்.
கோவை அருகே சின்னியம்பாளையம் பகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சூலூர் வட்டார மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற தா.பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசே காரணம். முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு, தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவர்களுக்கு இல்லை. முதல்வர் பொறுப்பு என்பது மலர் கிரீடம் அல்ல; அது முள்கிரீடம் ஆகும்.
தமிழக சட்டப்பேரவையில் இனிவரும் காலங்களில் ஒவ்வொரு நாளும் சோதனைகளை சந்தித்துதான் பொறுப்பில் நீடிக்க முடியும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது உடல் வலிமையைக் காட்டுவதற்குப் பதிலாக, சட்டப்படி வழங்கப்பட்டுள்ள வாக்குரிமையை மட்டுமே பயன்படுத்தி இருக்க வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு இல்லாமல் எப்படி வாக்கெடுப்பு நடத்தி இருந்தாலும், அந்தந்தக் கட்சிக்கு உள்ள பலம்தான் நிரூபிக்கப்பட்டு இருக்கும். எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு செல்லாது என்பதை ஏற்க முடியாது.
தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, மக்கள் நலனைத் தவிர தனக்கு எதுவும் இல்லை என்ற நற்பெயர் எடுப்பதே அவரது நோக்கமாக இருக்க வேண்டும். மக்களை திருப்திப்படுத்தும் வகையில், அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com