திருவள்ளூர் ரயில் நிலையத்தில் செயல்படாத சோதனைக் கருவி

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் "மெட்டல் டிடெக்டர்' சோதனைக் கருவி செயல்படாததால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் செயல்படாமல் உள்ள சோதனைக் கருவி.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் செயல்படாமல் உள்ள சோதனைக் கருவி.

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் "மெட்டல் டிடெக்டர்' சோதனைக் கருவி செயல்படாததால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் திருவள்ளூர் ரயில் நிலையமும் ஒன்று. தினமும் ஏராளமான ரயில்கள் இங்கு வந்து செல்கின்றன.
மாவட்டத்தின் தலைநகராக இருப்பதால், அரசு அலுவல் பணி, கல்வி, வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக, வெளியூர்களில் இருந்து திருவள்ளூருக்கும், இங்கிருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் ரயில்கள் மூலம் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் ரயில் நிலையத்தின் பிரதான வாயிலில் அமைக்கப்பட்டுள்ள "மெட்டல் டிடெக்டர்' என்னும் சோதனைக் கருவி சரவர இயங்காமல் உள்ளது.
இதனால், ரயில் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்கள், வெடிபொருள்களை சமூக விரோதிகள் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது.
எனவே, திருவள்ளூர் ரயில் நிலைய பிரதான நுழைவு வாயிலில் உள்ள மெட்டல் டிடெக்டர் சோதனைக் கருவி முறையாக இயங்குவதற்கு ரயில்வே நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com