சீறிப்பாய்ந்து வந்த காளையை பார்க்க திரண்டிருந்த மக்கள்.
சீறிப்பாய்ந்து வந்த காளையை பார்க்க திரண்டிருந்த மக்கள்.

அரியூர் எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்

வேலூரை அடுத்த அரியூரில் திங்கள்கிழமை நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதனை திரளான மக்கள் கண்டு களித்தனர்.

வேலூரை அடுத்த அரியூரில் திங்கள்கிழமை நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதனை திரளான மக்கள் கண்டு களித்தனர்.
அரியூரில் குடியரசு தின விழாவையொட்டி ஆண்டுதோறும் எருது விடும் விழா நடைபெறுவது வழக்கம். விழாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியதைத் தொடர்ந்து எருது விடும் விழாவுக்கு அனுமதியளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அரியூரில் எருது விடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. முதலிடம் பிடித்த காளையின் உரிமையாளருக்கு இரு சக்கர வாகனம், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டிருந்து விழாவைக் கண்டு ரசித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com