காவிரி நடுவர் மன்றத்துக்கு புதிய தலைவர்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு

காவிரி நதிநீர் நடுவர் மன்றத்துக்கு புதியத் தலைவரை உச்ச நீதிóமன்றம் நியமித்திருப்பதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

காவிரி நதிநீர் நடுவர் மன்றத்துக்கு புதியத் தலைவரை உச்ச நீதிமன்றம் நியமித்திருப்பதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வே.துரைமாணிக்கம் வெளியிட்ட அறிக்கை: காவிரி நதிநீர் நடுவர் மன்றத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து வந்த பல்வீர்சிங் செளகான் 1990 ஜூன் 2 ஆம் தேதி பதவியிலிருந்து விலகினார்.
அதன் பிறகு இந்தப் பொறுப்புக்கு வேறொருவரை நியமிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்தது.
இவ்வாறு காலம் தாழ்த்துவதை ஏற்றுக் கொள்ளாத உச்சநீதிமன்றம், அபய் மனோகர் சாப்பே என்பவரை நியமனம் செய்துள்ளது. இது காவிரி பிரச்னையில் தமிழகத்தின் உரிமை காக்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
புதிய தலைவர் தாமதமின்றி தகுந்த நடவடிக்கை எடுப்பதன் மூலம், காவிரிப் பிரச்னையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், நடுவர் மன்றத் தீர்ப்பையும் அமல்படுத்தி தமிழகத்தைப் பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com