குறுகிய காலத்தில் வறட்சி நிவாரண நிதி அளிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி பேட்டி

தமிழகத்தில் விவசாயிகளுக்கு குறுகிய காலத்தில் வறட்சி நிவாரண நிதி அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
குறுகிய காலத்தில் வறட்சி நிவாரண நிதி அளிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி பேட்டி

தமிழகத்தில் விவசாயிகளுக்கு குறுகிய காலத்தில் வறட்சி நிவாரண நிதி அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை (பிப். 20) அவர் அளித்த பேட்டி:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் நேரத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்.
2016 சட்டப் பேரவைத் தேர்தலின் போது ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 5 அறிவிப்புகளுக்கு இன்று கையெழுத்திட்டு இருக்கிறேன். இந்த அறிவிப்புகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி எப்போது வழங்கப்படும் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அவர், விவசாய மக்களுக்கு இன்னும் குறுகிய காலத்தில் வறட்சி நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
குடிநீர் பிரச்னை உள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், முதல்வராகப் பொறுப்பேற்றதும், அண்ணா நினைவிடத்தில் அது பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.
140 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வறட்சி தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. நகர்ப்புறங்களிலும், புறநகர்ப் பகுதிகளிலும், கிராமங்களிலும் தங்குதடையின்றி முழு அளவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தமிழகத்தில் லோக் ஆயுக்த சட்டம் கொண்டு வரப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அதுகுறித்து அரசு பரிசீலித்து முடிவெடுக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com