பேரவையில் நடந்தது என்ன? ஆளுநரிடம் அறிக்கை அளித்தது பேரவைச் செயலகம்

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை ஆளுநர் மாளிகையில் பேரவைச் செயலகம் அளித்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை ஆளுநர் மாளிகையில் பேரவைச் செயலகம் அளித்தது.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது சனிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வின்போது
நடந்த சம்பவங்கள் குறித்தும், அதை செல்லாததாக அறிவித்து ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி திமுக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஆளுநர் வித்யாசாகர் ராவை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக அறிக்கையை அளிக்கும்படி சட்டப் பேரவைச் செயலகத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, பேரவையில் நடந்த சம்பவங்கள், திமுக எம்எல்ஏக்கள் நடந்த கொண்ட விதம் உள்ளிட்டவை தொடர்பான காட்சிப் பதிவுகள் அடங்கிய குறுந்தகடு, புகைப்படங்கள் ஆகியன ஆளுநர் மாளிகைக்கு திங்கள்கிழமை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அறிக்கையை சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் உள்ள ஆளுநரின் செயலர் ரமேஷ் சந்த் மீனாவிடம் சட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் நேரில் அளித்தார்.
இந்த அறிக்கையின் விவரங்கள் மகாராஷ்டிரத்தில் உள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com