ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு: நெடுவாசலில் அதிகாரிகளை தடுத்து கிராம மக்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் எடுக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களை ஆய்வு செய்ய வந்த வருவாய்த் துறை அதிகாரிகளைத் தடுத்து,
நெடுவாசலில் ஆய்வு செய்ய வந்த வருவாய்த் துறை அதிகாரிகளை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
நெடுவாசலில் ஆய்வு செய்ய வந்த வருவாய்த் துறை அதிகாரிகளை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் எடுக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களை ஆய்வு செய்ய வந்த வருவாய்த் துறை அதிகாரிகளைத் தடுத்து, கிராம மக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க, கடந்த 15-ஆம் தேதி மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, திட்டம் தொடங்கப்பட்டால் நெடுவாசல், அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு, தங்களது வாழ்வாதாரமான விவசாயம் அழிந்துவிடும் எனக் கூறி, அப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நெடுவாசலில் ஒஎன்ஜிசி நிறுவனத்தால் முன்பு கையகப்படுத்தப்பட்ட விளைநிலத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்ய சென்றனர்.
அப்போது, நெடுவாசல் பகுதி விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை முற்றுகையிட்டதோடு, விளைநிலங்களில் ஆய்வு செய்ய விடாமல் தடுத்து அவர்களைத் திருப்பி அனுப்பினர்.
இதைத் தொடர்ந்து, மத்திய அரசு உடனே ஒப்புதலை திரும்பப் பெற வலியுறுத்தி, கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து நெடுவாசல் பகுதி விவசாயி விஜயசுந்தரம் கூறுகையில், நெடுவாசல், அதைச்சுற்றியுள்ள கிராம மக்களின் பிரதான தொழில் விவசாயம். அதுவும் மழையின்றி வறட்சியால் தடுமாறி வருகிறது.
ஆழ்குழாய் கிணறுகள் மூலம் கிடைக்கும் குறைந்தளவு நீரைக் கொண்டு சாகுபடி செய்துவருகிறோம். இதனால், இப்பகுதியில் தொடர்ந்து நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசு எங்கள் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்க அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களால் மத்திய அரசு தமிழக விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. எங்கள் பகுதியில் சாலைகளை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாத அரசு, இத்திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு சாலைகளை செப்பனிடும் வேலைகளை விரைவாக மேற்கொண்டு வருவது, திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளதையே காட்டுகிறது. ஆனால், மத்திய அரசு இத்திட்டத்தை ரத்து செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com