கொல்லைப்புற வழியாக ஆட்சிக்கு வர விரும்பவில்லை

திமுகவைப் பொருத்த வரையில் கொல்லைப்புற வழியாக வந்து ஆட்சியைப் பிடிக்க விரும்பவில்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கொல்லைப்புற வழியாக ஆட்சிக்கு வர விரும்பவில்லை

திமுகவைப் பொருத்த வரையில் கொல்லைப்புற வழியாக வந்து ஆட்சியைப் பிடிக்க விரும்பவில்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், அதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி மதுராந்தகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை மாற்றுக் கட்சியினர் சுமார் 5 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்.
இதைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது, நீதி விசாரணைத் தேவை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள்களாக ஜெயலலிதா இருந்தபோது அங்கிருந்த பன்னீர்செல்வம் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. இப்போது அவர் கூறுகிறார்.
தற்போது அனைத்து எம்எல்ஏ-க்களுக்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லாத நிலை உருவாகியுள்ளது. முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் உள்ள எம்எல்ஏ-க்களிடம் கொஞ்சம் கூட சிரிப்பு இல்லை.
சட்டப் பேரவையில் நடந்த சம்பவத்தைக் கண்டித்து புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டத் தலைநகரங்களில் திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
திமுகவைப் பொருத்த வரையில் கொல்லைப்புற வழியாக வந்து ஆட்சியைப் பிடிக்க விரும்பவில்லை. மக்களை நேரடியாகச் சந்தித்து ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வரவே விரும்புகிறது என்றார்.
காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளரும், உத்தரமேரூர் எம்எல்ஏ-வுமான க.சுந்தர் தலைமை வகித்தார். மதுராந்தகம் நகரச் செயலாளர் கே.குமார் வரவேற்றார். எம்எல்ஏ-க்கள் நெல்லிகுப்பம் புகழேந்தி (மதுராந்தகம்), ஆர்.டி.அரசு (செய்யூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, மாநில சிறுபான்மைப் பிரிவு எஸ்.டி.உக்கம்சந்த், ஒன்றியச் செயலாளர்கள் சத்யசாயி, ராமச்சந்திரன், ஏழுமலை, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com