தமிழை பயிற்றுமொழியாக அறிவிக்க வேண்டும்

தமிழை காக்க, தமிழகத்தில் அதனை பயிற்றுமொழியாக அறிவிக்க வேண்டும் என்று பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் விழாவில் பங்கேற்ற (இடமிருந்து) முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, கவிஞர் ஜெயபாஸ்கரன், அமுதசுரப
பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் விழாவில் பங்கேற்ற (இடமிருந்து) முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, கவிஞர் ஜெயபாஸ்கரன், அமுதசுரப

தமிழை காக்க, தமிழகத்தில் அதனை பயிற்றுமொழியாக அறிவிக்க வேண்டும் என்று பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில், உலகத் தாய்மொழி நாள் விழா, சென்னை அடையாறு முத்தமிழ்ச் பேரவை அரங்கில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
கவிஞர் ஜெயபாஸ்கரன் வரவேற்றார். முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தி முன்னிலை வகித்தார். விழாவுக்கு தலைமையேற்று, பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் ராமதாஸ் பேசியது:
தமிழ் மொழி சாகாது என்று பாரதியார் நம்பினார். ஆனால், தமிழ் மொழியின் இன்றைய நிலை என்ன? எந்த இடத்திலாவது தமிழ் இருக்கிறது என்று கூற முடியுமா? இருக்கிறது என்று கூறினால், பாராட்ட தனிமேடை அமைத்துத் தருகிறேன். எங்குமே தமிழ் இல்லை. அழிந்து வரும் தமிழை காக்க, மார்ச் 12 -ஆம் தேதி ஒரு கலந்துரையாடல் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். இதில் தமிழ் அறிஞர்கள் பங்கேற்பர்.
தமிழ் அறிஞர்கள் குடும்பத்தில் தமிழ் பேசப்படுகிறதா? தமிழை எப்படியாவது வளர்க்க வேண்டும் என்று முயற்சி எடுக்கிறோம். 10 வார்த்தைகளில் 8 வார்த்தையை ஆங்கிலத்தை உச்சரிக்கின்றனர். தமிழை காக்க தமிழகத்தில் தமிழை பயிற்றுமொழியாக அறிவிக்க வேண்டும்.
ஆங்கிலம் வேண்டாம் என்று சொல்லவில்லை. மழலையர் பள்ளி முதல் 12ம் வகுப்பு வரை ஒரு பாடமாக ஆங்கிலம் இருக்கலாம். ஆனால், தமிழ் பயிற்று மொழியாக இருக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு போராடியது போல, தமிழை காக்க இளைஞர்கள் போராட வேண்டும்.
நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழ் கொண்டுவரப்பட வேண்டும், தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.
விழாவில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் கோ.க.மணி, முன்னாள் மத்திய இணையமைச்சர் வேலு, தமிழ் மேம்பாட்டுச் சங்கப் பலகை தலைவர் ய.மணிகண்டன், எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் உள்பட பலர் பேசினர். 'தமிழை அரங்கேற்று' என்ற தலைப்பில் நடந்த கவியேற்றத்தில், கவிஞர்கள் நெல்லை ஜெயந்தா, தஞ்சை இனியன், திலகபாமா, வைரமணி, மழை அதியன், த.இலக்கியன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com