நெடுவாசலில் ஓஎன்ஜிசி அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்: கார் சிறைபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அப்பகுதிக்கு
நெடுவாசலில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் காரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
நெடுவாசலில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் காரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அப்பகுதிக்கு ஆய்வு செய்யச் சென்ற ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகளை முற்றுகையிட்டு, அவர்களின் காரை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் முன்பு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை செவ்வாய்க்கிழமை மாலை அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் ஆய்வு செய்ய 2 கார்களில் சென்றனர்.
இந்தத் திட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களில் கிராம மக்கள் ஈடுபட்டுவரும் நிலையில், அந்த நிறுவனத்தின் கார் ஊருக்குள் நுழைவதை அறிந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை முற்றுகையிட்டு அங்கிருந்து உடனே வெளியேறும்படி முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அதிகாரிகள் வந்த காரையும் சிறைபிடித்தனர். இதையடுத்து, சிறைபிடிக்கப்பட்ட காரை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு மற்றொரு காரில் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
ஒப்பாரி போராட்டம்: நெடுவாசலில் ஒஎன்ஜிசி நிறுவனத்தால் கையகப்படுத்தபட்ட நிலத்தில் அப்பகுதி பெண்கள் செவ்வாய்க்கிழமை ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
மத்திய அரசு திட்டத்தை கைவிடும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அப்பகுதியினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com