புதுவையில் இதுவரை 1.6 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை-ரூபல்லா தடுப்பூசி

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1.6 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை-ரூபல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1.6 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை-ரூபல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் சார்பில் தட்டம்மை, ருபல்லா நோய்த் தடுப்பூசி போடும் திட்டத்தை கர்நாடகம், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், லட்சத் தீவுகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தட்டம்மை, ருபல்லா நோயை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும், 9 மாதங்கள் முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளை பாதுகாக்கவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதுவையில் பிப்ரவர் 6-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 3.1 லட்சம் குழந்தைகளுக்கு இத்தடுப்பூசி போடப்படும் என அரசு அறிவித்தது.
அதன்படி கடந்த 6-ம் தேதி தட்டம்மை, ருபல்லா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.  தடுப்பூசி போடப்பட்டதால் ஏறக்குறைய 10-க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் தொடர்ந்து தட்டம்மை ரூபல்லா தடுப்பூசி போடும் பணி புதுவையில் நடந்து வருகிறது. சமூக வலைதளங்களில் தட்டம்மை நோய் தடுப்பூசி குறித்து பரவி வரும் வதந்தியால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.

தட்டம்மை தடுப்பூசியால் எந்த பாதிப்பும் இல்லை என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரிமா சங்கம் சார்பில் விழிப்புணர்வு வாகன பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வேன்கள் மூலம் தட்டம்மை நோய் தடுப்பூசி பயன்கள் குறித்து பிரசாரம் செய்யப்படுகிறது. இப்பிரசார பயணத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி புதன்கிழமை சட்டப்பேரவை அருகே தொடங்கி வைத்தார். சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் கேவி.ராமன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

புதுவையில் இதுவரை தட்டம்மை தடுப்பூசி 1,60,000 குழந்தைகளுக்கு போடப்பட்டுள்ளது. விடுபட்டுள்ள குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com