கொடைக்கானலில் மரத் தக்காளி "சீசன்' தொடக்கம்

கொடைக்கானலில் மரத் தக்காளி சீசன் தொடங்கியதையடுத்து, அவற்றை சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
கொடைக்கானல் பகுதியில் விற்பனைக்காக  வைக்கப்பட்டுள்ள மரத் தக்காளி.
கொடைக்கானல் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மரத் தக்காளி.

கொடைக்கானலில் மரத் தக்காளி சீசன் தொடங்கியதையடுத்து, அவற்றை சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
இப்பகுதிகளில் வாழை, பலா, பிளம்ஸ், பட்டர் புரூட், பேசன் புரூட் உள்ளிட்ட பழங்கள் விளைகின்றன. இதில், மரத் தக்காளி பழமும் ஒன்று.
இப்பழம் தக்காளி வடிவத்தில் இருப்பதால், இது மரத் தக்காளி என அழைக்கப்படுகிறது.
இந்தப் பழம், பிப்ரவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை நன்கு விளையும். இப்பழம் புளிப்பு மற்றும் இனிப்பு சுவைகளைக் கொண்டது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருந்துப் பொருளாக இது பயன்படுவதால், கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் இவற்றை வாங்கிச் செல்கின்றனர். ஒரு பழத்தின் விலை ரூ.5 ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com