அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் இன்று பொறுப்பேற்றார்.
அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக டி.டி.வி. தினகரன் அண்மையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் டி.டி.வி. தினகரன் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சென்று அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக முறைப்படி பொறுப்பேற்றுகொண்டார்.
அப்போது அவருடன், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உடன் இருந்தனர்.