ஈஷா மையத்தில் விழா நடைபெறுகையில் பிரச்னைகளை எழுப்புவது முறையல்ல

ஈஷா யோக மையத்தில் நிகழ்ச்சி நடைபெறும்போது மட்டும் பிரச்னைகளை எழுப்புவது முறையல்ல என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஈஷா மையத்தில் விழா நடைபெறுகையில் பிரச்னைகளை எழுப்புவது முறையல்ல

ஈஷா யோக மையத்தில் நிகழ்ச்சி நடைபெறும்போது மட்டும் பிரச்னைகளை எழுப்புவது முறையல்ல என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கோவையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, திமுக செய்த தவறுகளை மறைக்கவே அக்கட்சி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளது. எந்த வழியைக் கடைப்பிடித்தாலும், திமுக மீது மக்களுக்கு நம்பிக்கை வராது. திமுக- அதிமுக என்ற இரு கட்சிகளாலும் தமிழகத்துக்கு எந்த நன்மையும் வராது.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கவனத்தை சுகாதாரம், விவசாயிகள் பிரச்னையில் செலுத்த வேண்டும். வறட்சி, புயல் பாதிப்பு, பயிர்ப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து முறைப்படி கேட்டுப் பெற வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் மீது மத்திய அரசு திணிக்கவில்லை. அது முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டம். அதேநேரம், மக்கள் ஏற்காத எந்தத் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது.
கோவையில் ஈஷா யோக மையம் விதிமீறலில் ஈடுபட்டிருந்தால், அந்தப் பிரச்னைக்கு நீதிமன்றம் மூலமாகத் தான் தீர்வு காண வேண்டும். அதை விடுத்து, நிகழ்ச்சி நடைபெறும்போது மட்டுமே பிரச்னைகளை எழுப்புவது முறையல்ல என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com