புதிய தொழில்நுட்பத்தில் இலகு ரக போர் விமானங்கள் தயாரிப்பு

புதிய தொழில்நுட்பத்தில் இலகு ரக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் செலவினம் மிச்சப்பட்டுள்ளதாக இந்திய விமானப் படையின் ஏர் கிராப்ட் பிரிவின் தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் குல்தீப் சர்மா தெரிவித்தார்.

புதிய தொழில்நுட்பத்தில் இலகு ரக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் செலவினம் மிச்சப்பட்டுள்ளதாக இந்திய விமானப் படையின் ஏர் கிராப்ட் பிரிவின் தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் குல்தீப் சர்மா தெரிவித்தார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல், ரசாயனப் பொறியியல் பள்ளி சார்பில் விண்வெளி கட்டமைப்புகள் குறித்த மூன்று நாள் தேசிய கருத்தரங்கம் தொடக்க விழா பல்கலை. வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கை தொடங்கி வைத்து,ஏர் மார்ஷல் குல்தீப் சர்மா பேசியதாவது:
இந்திய விமானப் படையில் உள்ள மிக் 20 ரக ஹெலிகாப்டர்கள் இந்திய தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. விமானப் படையில் புதிய தொழில்நுட்பத்துடன் இலகு ரக போர்விமானம், ஹெலிகாப்டர்கள் உருவாக்கப்படுவதன் மூலம் ரூ. 1,000 கோடி செலவினம் மீதப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
விழாவுக்கு விஐடி பல்கலை. இணை துணைவேந்தர் வி.ராஜு தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் பேராசிரியர் பத்மநாபன் வரவேற்றார். ஐஐடி சென்னை பேராசிரியர் சிவகுமார் கெளரவ விருந்தினராகக் கலந்து கொண்டார். விஐடி இயந்திரவியல், ரசாயனப் பொறியியல் பள்ளி முதல்வர் ஏ.அறிவழகன், பேராசிரியர்கள் தேவேந்திரநாத், ராம்குமார், சுபாஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கருத்தரங்க சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. வானூர்திகள் மேம்பாட்டுக்கான நானோ, மல்டி, மைக்ரோ காம்போசிட் கட்டமைப்புகள், உலோக வடிவமைப்பு, மேம்பாடு, இலகு ரக வாகன வடிவமைப்பு உள்ளிட்டவை குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது. இதில் நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களின் இளம் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் 150 பேர் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com