நீட் தேர்வு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கடிதம் எழுதியுள்ளார்.
நீட் தேர்வு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பிரணாப் முகர்ஜிக்கு வாசன் வெள்ளிக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் நீட் தேர்வு முறையைக் கட்டாயப்படுத்துவது மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். நீட் தேர்வு முறை அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் உகந்தது இல்லை. ஏற்கெனவே, பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு உயர் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. இந்தச் சூழலில் பொதுவான தேர்வு முறையை மாணவர்களிடையே திணிப்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது. மாணவர்கள், பெற்றோர், அரசியல் கட்சிகள் என ஒட்டுமொத்த தமிழகமே நீட் தேர்வு முறையை எதிர்க்கின்றன. பல மாநிலங்களிலும் நீட் தேர்வு முறைக்கு எதிர்ப்பு உள்ளது. எனவே, தமிழகச் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் என வாசன் கூறிóயுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com