முதல்வராக பழனிசாமி நீடிக்கும்வரை இனி நான் தமிழன் கிடையாது: மார்க்கண்டேய கட்ஜூ

முதல்வராக பழனிசாமி நீடிக்கும்வரை இனி நான் தமிழன் கிடையாது என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தனது முகநூல்
முதல்வராக பழனிசாமி நீடிக்கும்வரை இனி நான் தமிழன் கிடையாது: மார்க்கண்டேய கட்ஜூ

சென்னை: முதல்வராக பழனிசாமி நீடிக்கும்வரை இனி நான் தமிழன் கிடையாது என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றிருப்பதற்கு தமிழக மக்கள் மத்தியில் எதிர்ப்பலை உருவாகாமல் இருப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ இன்று சனிக்கிழமை தனது முகநூல் பக்க பதிவில் வெளியிட்டுள்ள கருத்து தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்ஜூ தனது பதிவில் கூறியிருப்பதாவது:

எனது தமிழ் உடன்பிறப்புகளே,
ஒரு சிறைப்பறவையின் கைப்பாம்பு உங்களது முதல்வராக ஆக்கப்பட்டுள்ளது; ஆனால் நீங்கள் மௌனம் காப்பது ஏன்?

தலைசிறந்த சோழ, சேர, பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்களான நீங்கள் இப்படி படுகுழிக்குள் வீழ்ந்திருப்பதை உணர்ந்தால் உங்களது மூதாதையர்கள் வெட்கித் தலைகுனியமாட்டார்களா?

பெருமைக்குரிய திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், ஆண்டாள், சுப்பிரமணிய பாரதியார் வழிவந்தவர்கள் நீங்கள். சின்ன முணுமுணுப்புகூட காட்டாமல் இந்த மானக்கேட்டை ஏற்றுக்கொண்டிருப்பது அவமானமாகத் தெரியவில்லையா?

பெருமையுடன் "நானும் ஒரு தமிழன்' என்று சொல்வதுண்டு. ஆனால், இப்போது எந்த முகத்துடன் அப்படிச் சொல்வேன்?

இப்போது ஒன்றை வெளிப்படையாகவே சொல்கிறேன். தமிழர்களின் மீது படிந்துள்ள ஒரு கறையாக, சொருகியுள்ள கொடுக்காக உள்ள இந்த பழனிச்சாமி உங்களது முதல்வராக நீடிக்கும்வரை இனி நான் தமிழன் கிடையாது.

மானங்கெட்டத்தனத்துடனும் அவப்பெயருடனும் வாழ்வதை பற்றிய அக்கறையில்லாத ஒரு சமூகத்தில் நான் ஒரு அங்கமாக நீடிக்கப்போவதில்லை. அதற்கு நான் சாவதே மேல் என்று உணர்ச்சிவயப்பட்டு தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார் மார்க்கண்டேய கட்ஜு.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவரே இவ்வாறு பதிவிட்டிருப்பது சமூக தளங்களில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஜல்லிக்கட்டுக்கான தன்னெழுச்சி போராட்டத்திற்கு ஆதரவாகவும், சில வழிமுறைகளையும் பதிவிட்டு இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியவர் கட்ஜூ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com