விருது திரும்பப் பெற கோரும் மனு: விசாரணை ஒத்திவைப்பு

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவுக்கு அறிவிக்கப்பட்ட பத்மவிபூஷண் விருதை திரும்பப் பெறக் கோரிய மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவுக்கு அறிவிக்கப்பட்ட பத்மவிபூஷண் விருதை திரும்பப் பெறக் கோரிய மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்குரைஞர் வெற்றிச்செல்வன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஜக்கிவாசுதேவுக்கு 2017-ஆம் ஆண்டுக்கான பத்மவிபூஷண் விருதை கடந்த ஜனவரியில் மத்திய அரசு அறிவித்துள்ளது. 1.25 லட்சம் சதுர அடியில் விதிகளை மீறி கட்டடம் கட்டியதாக எழுந்த புகாரில், அவற்றை இடிப்பதற்கு 2012-ஆம் ஆண்டு டிசம்பரில் "நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை உதாசீனம் செய்து, விதிமீறி கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக கட்டடங்களை கட்டியவருக்கு விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com