உள்ளாட்சித் தேர்தலில் பாமகவுக்கு வாய்ப்பு தாருங்கள்: ராமதாஸ்

பொதுமக்களுக்கு சிறப்பாகப் பணியாற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாமகவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தலில் பாமகவுக்கு வாய்ப்பு தாருங்கள்: ராமதாஸ்

பொதுமக்களுக்கு சிறப்பாகப் பணியாற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாமகவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்
தெரிவித்தார்.
சென்னை வடபழனியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பாமக பொதுக் கூட்டத்தில், அவர்
பேசியதாவது:-
தமிழகத்தில் மோசமான ஆளுங்கட்சியும், அதைவிட மோசமான எதிர்க்கட்சியாகவும் திராவிடக் கட்சிகள் உள்ளன. இளைஞர்களும், பொதுமக்களும் விரும்பும் மாற்றத்தை பாமகவால் கொடுக்க முடியும். இதுதொடர்பாகதான் பேரவைத் தேர்தல் அறிக்கையிலும் வெளியிட்டோம்.
நீட் தேர்வு கூடாது, மதுக் கடைகளை மூடுதல் போன்ற பொதுமக்கள் பிரச்னைகளுக்காக பல்வேறு போராட்டங்களை பாமக நடத்தியுள்ளது.
ஜாதி கட்சி முத்திரை ஏன்?
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வந்துவிடுமோ என்ற அச்சத்தால், பாமகவுக்கு ஜாதிக் கட்சி முத்திரையிடுகிறார்கள். திராவிட கட்சிகளின் கூட்டணியில் பாமக இருந்தபோது ஜாதிக் கட்சியாக தெரியவில்லையா? பாமகவில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். எனவே, பொதுமக்களுக்கு சிறப்பாகப் பணியாற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் தன்னெழுச்சியுடன் திரண்டு போராடினார்கள்.
அதே போன்று திராவிடக் கட்சிகளிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்கவும், முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும் இளைஞர்கள் போராட வேண்டும்.
கட்சிகளைப் பார்த்து வாக்களிக்காதீர்கள். சிறப்பான திட்டங்களைப் பார்த்து வாக்களியுங்கள்.
நேர்மையான முதல்வர்கள் அமர்ந்த வரிசையில், பலர் அமரும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி, மாநில துணைப் பொதுச் செயலர் ஏ.கே.மூர்த்தி, பகுதி செயலர் முத்துக்குமார், நிர்வாகி ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com