நாகூர் தர்காவில் கந்தூரி விழா பாய்மரம் ஏற்றம்

நாகூர் தர்காவின் கந்தூரி விழாவையொட்டி, தர்கா மனோராக்களில் பாய்மரம் (கொடிமரம்) ஏற்றும் நிகழ்ச்சி சனிக்கிழமை காலை நடைபெற்றது.

நாகூர் தர்காவின் கந்தூரி விழாவையொட்டி, தர்கா மனோராக்களில் பாய்மரம் (கொடிமரம்) ஏற்றும் நிகழ்ச்சி சனிக்கிழமை காலை நடைபெற்றது.
நாகூரில் உள்ள பாதுஷா சாகிபு ஆண்டவர் தர்கா புகழ்பெற்ற தர்காக்களுள் ஒன்றாக விளங்குகிறது. எண்ணற்ற மகிமைகளைக் கொண்ட இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி, 460-ஆம் ஆண்டு கந்தூரி விழா பிப். 28- ஆம் தேதி புனித கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது. இதையொட்டி, தர்காவின் மனோராக்களில் கொடிமரம் ஏற்றும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு பாரம்பரிய முறைப்படி வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு, தர்காவின் 5 மனோராக்களிலும் கொடிமரம் ஏற்றப்பட்டது.
கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடி ஊர்வலம் மற்றும் புனித கொடியேற்றம் பிப். 28-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. சந்தனக்கூடு ஊர்வலம் மார்ச் 9-ம் தேதி தொடங்கி மார்ச் 10- ஆம் தேதி காலை நிறைவடைகிறது. மார்ச் 10-ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நாகூர் ஆண்டவரின் புனித ரவுலா ஷரீப்புக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com